2020 வரை இந்த அரசாங்கத்தை இழுத்துச் செல்ல முடியாது!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் புதிய சட்ட மூலமொன்றைக் கொண்டு வரும் போது, வெற்றிலையை ஏந்திக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் வந்து சேர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
2020 வரை இந்த அரசாங்கத்தை இழுத்துச் செல்ல முடியாது எனவும் கூட்டு எதிர்க் கட்சி சார்பு எம்.பி. குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் சின்னம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். எமது ஒரே எதிர்பார்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவ்வருட இறுதிக்குள் நாட்டின் சிம்மாசனம் ஏற்றுவதாகும்.
எந்த இலையை தந்தாலும் வாக்களிக்க பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இம்மாத இறுதிக்குள் எதுவென்பதை அறிவிப்போம்.


Comments
Post a Comment