20 வீடுகள் நீரில் மூழ்கின!

ஹிக்கடுவ , துடுவேகொடை வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக 20 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

துடுவேகொடை வாவிக்கு அருகில் காணப்படும் 20 வீடுகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய அளவில் மழை பெய்தால் கூட இந்த வாவி பெருக்கெடுப்பதன் காரணமாக தங்களின் வீடுகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களே இந்த பகுதியில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments