மத்திய மாகாணத்தில் 216 சிறுவர்கள் துஷ்பிரயோகம்!

மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்கள் பலவற்றில் 216 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி புஸபாதான மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் நிலையங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments