26 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
26 வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை காலாவதியான பொருட்கள் காட்சிப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் புளியம்பொக்கணை கண்டாவளை ஆகிய பகுதிகளில் விலைகள் காட்சிப்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்தமை காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 26 வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் பிற்பகல் குறித்த வர்த்தகர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து தொண்ணூற்றி மூவாயிரதது 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment