மின்தாக்கி 28 வயது இளைஞர் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு கூலாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மின் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று தொழில் நிமிர்த்தம் இலங்கை இலங்கை தொலைத் தொடர்ப்பு சேவையின் மின் கம்பம் ஒன்றை நாடுகின்ற போது 33 ஆயிரம் சத்தி உடைய மின் வலு தாக்கி உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு கூ லாவடியை சேர்ந்த  28  வயதுடைய இமானுவேல் பார்த்திபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments