வரலாற்றில் இன்று -30-10-2016

அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்[தொகு]

1485 – ஏழாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.

1905 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.

1918 – ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.

1925 – ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.

1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.

1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1972 – சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1985 – சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

1991 – மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.

1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2006 – பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்[தொகு]

1735 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826)

1898 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (இ. 1974)

1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)

1909 – ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1966)

1942 – சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி

1953 – சார்லஸ் மார்டின் ஸ்மித், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1960 – டீகோ மரடோனா, எர்ச்செந்தீனக் கால்பந்து வீரர்

1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

இறப்புகள்[தொகு]

1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824]])

1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்தவர் (பி. 1828)

1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

1969 – அனந்தராம தீட்சிதர், தமிழக சமய சொற்பொழிவாலர் (பி. 1903)

1972 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1911)

1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)

1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)

1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)

1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901)

1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).

2010 – ஆரி முலிச், டச்சுக் கவிஞர் (பி. 1927)

சிறப்பு நாள்[தொகு]

விடுதலை நாள் (சிலோவாக்கியா)

தேவர் செயந்தி (முக்குலத்தோர் சமூகம்)


Comments