ரவிராஜ் கொலை வழக்கு 31-ம் திகதி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்ப்பட்ட வழக்கை எதிர்வரும் 31-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கை சிங்களம் பேசும் விஷேட ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

அந்த ஜூரி சபையில் உள்ளடங்குபவர்கள் பற்றி இறுதி தீர்மானம் எதிர்வரும் 31-ம் திகதி விசாரணையின் போது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் நியாமாக வழக்கு இடம்பெற வெண்டும் என்பதால் பிரதிவாதிகள் தரப்பு கோரிக்கைக்கு அனுமதியளிப்பதாக மேல் நிதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Comments