கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 3225 பேருக்கு ஆசிரியர் நியமனம்

இலங்கை கல்­வி­யியற் கல்­லூ­ரி­களில் டிப்­ளோமா பாட­நெ­றி­யினை நிறை­வு­செய்த மூவா­யி­ரத்து இரு­நூற்று இரு­பத்­தைந்து பேருக்கு நேற்று ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. அல­ரி­மா­ளி­கையில் கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தலை­மை­யி­லேயே நிய­மனம் வழங்கும் நிகழ்வு நடை­பெற்­றது.

நிய­மனம் பெற்ற மூவா­யி­ரத்து இரு­நூற்று இரு­பத்­தைந்து பேரில் இரண்­டா­யி­ரத்து இரு­நூற்று பதி­னொரு சிங்­கள மொழி மூல­மா­ன­வர்­களும் ஆயி­ரத்து பதி­ன் நான்கு தமிழ் மொழி மூல­மா­ன­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

தேசிய பாட­சா­லை­க­ளுக்கு ஆயி­ரத்து நானூற்று 66 பேர் நிய­மனம் பெற்­றுள்­ளனர். முன்­னூற்று எட்டு தமிழ் மொழி மூல­மா­ன­வர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேலும் மேல் மாகாணப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­வ­தற்­கென 83 பேர் நிய­மனம் பெற்­றுள்­ளனர். அதில் தமிழ் மொழி மூல­மா­ன­வர்கள் 15 பேர் உள்­ள­டங்­கு­கின்­றனர். தென் மாகாண பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­வ­தற்கு 154 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் அதில் 18 தமிழ் மொழி­யி­லா­ன­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இதே­வேளை ஊவா மாகா­ணத்­திற்கு 109 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் 30 தமிழ் மொழி­யி­லா­ன­வர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வட­மத்­திய மாகாணப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­வ­தற்­கென 229 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் அதில் 179 சிங்­கள மொழி மூல­மா­ன­வர்­களும் 50 தமிழ் மொழி­யி­லா­ன­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

சப்­ர­க­முவ மாகாணப் பாட­சா­லை­களில் கட­மையாற்­று­வ­தற்­கென 192 பேர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். மத்­திய மாகாணப் பாட­சா­லை­களில் கட­மையாற்­று­வ­தற்­கென 375 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் அதில் 179 தமிழ் மொழி­யி­லா­ன­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

வடமேல் மாகாணப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­வ­தற்­கென 184 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் அதில் 140 சிங்­கள மொழி மூல­மா­ன­வர்­களும் 44 தமிழ் மொழி­யி­லா­ன­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். வட மாகாணப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்­று­வ­தற்­கென 241 பேர் நிய­மனம் பெற்­றுள்­ள­துடன் அதில் 39 பேர் சிங்­கள மொழி­யி­லா­ன­வர்­களும் 202 பேர் தமிழ் மொழி­யி­லா­ன­வர்­க­ளு­மாவர்.

கிழக்கு மாகாணப் பாட­சா­லைகளில் கட­மை­யாற்­று­வ­தற்­கென 192 பேர் நிய மனம் பெற்றுள்ளதுடன் அதில் 107 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின் றனர்.

இதேவேளை நியமனம் பெற்றவர்கள் தமது கல்வியியற் கல்லூரி கற்கைநெறி யின் போது வெளிப்படுத்திய திறமை களின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக் கது.

Comments