கண்டியில் 39 மணி நேர நீர் துண்டிப்பு!

கண்டி அதிகார எல்லையின் பெரும்பாலான பகுதிகளில்   நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்ல – உக்குவெல சுரங்கப் பாதை திருத்த நடவடிக்கைகள் காரணமாக இன்று (09) இரவு 9.00 மணி முதல் 11 ஆம் திகதி காலை 9.00 மணி வரையில் 39 மணி நேர நீர் விநியோக நடவடிக்கைகள் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கண்டி நீர் விநியோக பிரிவு மற்றும் பொல்கொல்ல நீர் விநியோகப் பிரிவு என்பவற்றினால் நீர் கிடைக்கப் பெறும் பிரதேசங்களுக்கு இதனால் நீர் துண்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, பாததும்பர, ஹாரிஸ்பத்துவ, அக்குரணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள், குண்டசாலை தொகுதிக்குரிய லேவல்ல,சிறிமல்வத்த, அமுனுகம மற்றும் வலல ஆகிய பிரதேசங்களும், கண்டி மாநாகர சபை அதிகார எல்லையில், அஸ்கிரிய நீர் தாங்கியினால் விநியோகிக்கப்படும் பிரதேசங்களுக்கும் இவ்வாறு நீர்  விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments