மாணவர்கள் படுகொலை சிறீலங்கா தூதரகம் முற்றுகை! சீமான் உட்பட 400பேர் அதிரடி கைது!(வீடியோ)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உட்பட அக்கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து, அவர்களிடம் மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிடவும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்திடவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட அக்கட்சியினரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

Comments
Post a Comment