4500 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

4500 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது வீதி விதிமுறைகளை மீறியமை தொடர்பிலேயே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 480 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த பிரனாந்து இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலத்தில் 4500 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த பிரனாந்து கூறினார்.

காலை நேரங்களில் விசேடமாக பாடசாலைகளுக்கு அருகில் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments