4 லட்சம் ரூபா பெறுமதியான மர குற்றிகள் கைப்பற்றல்!

4 லட்சம் ரூபா பெறுமதியான மர குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி பொலிசாரிறற்கு கிடைத்த  தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன அவர்களின் கட்டளைக்கமைய மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இவ்வாறு மரக்குற்றிகளும, அதனை எடுத்து சென்ற கப்வாகனமும் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த கப் வாகனத்தினை பாதுகாப்பாக எடுத்து செல்ல உதவிய மோட்டார் சைக்கிளும் கைப்பெற்றப்பட்டதுடன், குறித்த மரக்டகுற்றிகள் எடுத்து செல்லப்பட்ட மரக்காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்தமையால், குறித்த மரக்காலையில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கைபெற்றப்பட்டது,

குறித்த மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 4 லட்சம் எனவும், விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments