மாணவர்கள் கொலை: 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளும் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment