பஸ் விபத்தில் 71 பேர் காயம்!

அக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை டயகம வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக

தலவாக்கலையிலிருந்து டயமக நோக்கி தனியார் பஸ்ஸொன்று மொராயா பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் பயணித்த 66 மாணவர்கள் உள்ளிட்ட 71 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள அக்கரைப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments