கண்டியில் வரும் 9-ம் திகதி 36 மணித்தியாலம் நீர் வெட்டு!

கண்டி பொல்கொல்ல உக்குவேல நீர் சுரங்கப்பாதை பரிசோதனை காரணமாக எதிர்வரும் 9-ம் திகதி இரவு முதல் 36 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாகவும் இது கண்டியில் பல பிரதேசங்களிலும் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி பாததும்பர, ஹரிஸ்பத்து, அக்குரன, குண்டசாலை, லேவெல்ல, அமுனுகம மற்றும் வலல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Comments