தமிழ் மக்களின் உரிமை போர் இன்னும் ஓயவில்லை!
நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த ஆயுதப் போரட்டம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தங்களது உரிமைக்காக போராடும் தமிழ் மக்களின் போர் இன்னும் ஓயவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நிர்மாண நிர்மாணிகள் சங்கத்தின் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மக்களின் பல தேவைகள் இன்னும் தீர்க்கப்படாது இழுபறி நிலையில் காணப்படுகின்றன. அவற்றில் பிரதானமாக அரசியல் தீர்வு இன்னும் எமக்கு கிடைக்காததுடன், எமது மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியிலான மாற்றங்களும் இதுவரை ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் புலம்பெயர்ந்த வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பாரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன்வந்துள்ளனர். எமது மாகாணங்களின் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களின் பங்கு அவசியமாகும்.
இங்கு பல வங்கிகள் முதலீடுகளை செய்துள்ள போதிலும், அவற்றில் பெரும்பான்மையானவை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. இவ்வாறாக தங்களது தேவைகள், உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment