கல்ஹின்னையில் சுமுக நிலை நல்லிணக்கத்துக்கு குழு நியமனம்
கல்ஹின்னையில் கடந்த மாதம் இரு சமூகங்களுக்கு இடையில் உருவான முறுகல் நிலை தற்போது சுமுகமான நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பலப்படுத்துவதற்கு கல்ஹின்னையில் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்ஹின்னை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ஏ.என். சக்கி மொஹமட் (ரப்பானி) தெரிவித்தார்.
இந்த 11 பேர் கொண்ட குழுவில் ஜம்மியத்துல் உலமா சபை, ஜும்ஆ பள்ளிவாசல், ஜம்மியத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி என்பனவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கியுள்ளனர்.
இக்குழு ஊரில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை, நல்லிணக்கம் என்பன தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகிறது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கல்ஹின்னை ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ பிரசங்கங்களும் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன.
கல்ஹின்னையில் இரு சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இரவு ஏற்பட்டது.
கல்ஹின்னையிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சிகரட் கேட்டபோது சிகரட் விற்பனை செய்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டதையடுத்தே அங்கு முறுகல் நிலை உருவானது.
அன்று இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பிலும் 10 பேர் சந்தேகத்தின் பேரில் அங்கும்புர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் சவூதி அரேபியாவில் ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுக்கு அறிவிக்கப்படவே அவர் நாடு திரும்பி சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.
அங்கும்புர பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பினருக்கு இடையிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இது ஒரு இனவாத செயலல்ல. மதுபோதையில் இருந்த இருவரால் உருவான கைகலப்பே.
இதனை பெரிதுபடுத்த வேண்டாமென அங்கும்புர இஹலமுல்ல பன்சலை விகாராதிபதி சுகுன குணவன்ச தேரர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Post a Comment