ஜனாதிபதியையும் பிரதமரையும் புகழ்ந்த எதிர்கட்சி தலைவர்!
நாட்டில் ஜனநாயகம் நிலைபெற வேண்டுமாயின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது தான் ஜனநாயகம் பலம் பெறும்” என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தேசிய சுற்று சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை திருகோணமலையில் நடைபெற்றது போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
அதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள் நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி பதவி ஏற்ற பின் சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாம் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.
நாட்டின் பொருளாதாரம், கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு மக்கள் மத்தியில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகவே கூறுகின்றார் என இரா.சம்பந்தன் புகழ்ந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment