கணவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு மனைவி கள்ளக்காதலுடன் வீட்டில் : திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவில் கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து மனைவி கள்ளக்காதலுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை கணவரின் உறவினர்களினால் குறித்த பெண் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று அதிகாலை (23) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான பெண் அதே இடத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 36 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது – கணவனும் மனைவியும் வழமையாக பக்கத்து வீட்டிற்கு செல்வதாகவும் நேற்றைய தினம் வராதமையினால் மனைவியை அழைத்து ஏன் வரவில்லை சுகவீனம் ஏதுமா என விசாரணை செய்த போது அவர் தூங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீட்டில் லைட் எரியாத நிலையில் மோட்டார் சைக்கிள் வந்ததை அவதானித்த அயலவர்கள் தொலைபேசி மூலம் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் மூடிக்கிடந்த வீட்டை திறக்குமாறு கூறியதையடுத்து கதவை திறக்காதமையினால் கதவை உடைத்து உள்ளே இருந்த நபரையும் பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கணவர் மயக்க முற்ற நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment