கஞ்சாவியாபாரிகளால் தாக்கப்பட்ட பிக்கு !

நீண்ட நாட்களாக  கம்பளை குருந்துவத்தகொலவல  பிரதேசத்தில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைமையப்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக  குறித்த பிரதேசத்தின்  விகாரையின் விகாராதிபதி அத்துருகிரிய சந்திரரத்ன தேரர் இது தொடர்பில்பிரதேசவாசிகளை தெளிவுபடுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை குறித்த பிரதேசத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபர்களுக்கு எதிராக பிரதேசவாசிகளும் எதிர்ப்பினைவெளியிட்டு வந்துள்ள நிலையில் குறித்த பிக்கு மீது பிக்கு மீது கஞ்சா வியாபாரியும், அவரது மகனும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்குளான பிக்கு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments