ஜனாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டன.

நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி, மேற்படி நிகழ்விலும் இணைந்துகொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கமைய இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

எதிர்காலத்தில் மேலும் இரண்டு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு மாணவர்களுடன் நட்புறவுடன் உரையாடி அவர்களது குறைகளையும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Comments