பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் கைது!
நாடு முழுவதும் கொலை, கொள்ளை, வீடுடைப்பு, சட்டவிரோத போதை தரும் குளிர்பானம் மற்றும் ஹெரோயின் வியாபாரம் என்பவற்றுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை ஹெரோயினுடன் அல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பலாங்கொட, திலகபுரவில் வசிக்கும் ஒருவரு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோரலகே தம்மிக எனும் பெயரையுடைய இவர் நேற்று (17) கைது செய்யப்பட்டு, அல்பிட்டிய மஜிட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment