ரிசாத் -விஜித விஜயமுனி சொய்சாவிடம் பேச்சு: பொத்துவில் ஹெட ஓயா நீர்பாசனத்திட்டம் புனரமைப்பு
பலவருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ஹெட ஓயா நீர்பாசனத்திட்டம் அடுத்த வருடத்தில் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் சொய்சாவினை அவரது அமைச்சில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2006 ஆம் ஆண்டின் பிற்பாடு இத்திட்டம் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம் பெறாத நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் இத்திட்டத்தை நடை முறைக்கு கொண்டுவருவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும்,மக்களும் நன்மையடையவுள்ளமை தொடர்பில் எடுத்துரைத்திருந்திருந்தார்.
இதனையடுத்து நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சின் நிதி மற்றும் வெளிநாட்டு நிதிகளை கொண்டு இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பணிப்புரை வழங்கினார்.
அதன் மூலம் பொத்துவில்,லாகுகல,பானம மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசம் விவசாயத்திலும், சேனைப் பயிர் செய்கையிலும் முன்னேற்றம் காணும் என இதன் போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment