இரு வேறு இடத்தில் இரண்டு பெண்கள் தற்கொலை!
மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயதுடைய மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த மாணவியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகவும், தாய் ஒரு ஆசிரியை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா ஏழாம் ஒழுங்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா ஏழாம் ஒழுங்கை குகன்நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2.40 மணியளவில் இவ்வாறு குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கியவர் இராணிமலர் (வயது 68) எனவும், இவர் இரண்டு தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments
Post a Comment