பிரதமர் பெல்ஜியம் பயணம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பெல்ஜியம் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இந்த விஜயத்தின் போது ஜி எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப்பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்டத்தினருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைநகர் பிரசல்ஸில் பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மிச்செல் மற்றும் லோரன்ட் இளவரசர் உள்ளிட் டோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ரத்நாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, பிரதமரின் விஷேட உதவியாளர் சென்றோ பெரேரா ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment