அடுத்த மாதம் வடக்கின் வீட்டுத்திட்டம் கையளிக்கப்படும்!
மீள்குடியேற்றத்திற்கென வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 11 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நவம்பர் மாதம் 5000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் ஆயிரம் வீடுகள் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி வீடுகளை பூர்த்திசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடுகளில், தாயகம் திரும்பவுள்ள இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் 320 பேரும் குடியேற்றவுள்ளதாக சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment