மைத்திரி – ரணில் அரசு இராஜினாமா செய்ய வேண்டும்!
நாட்டில் தற்போதைய நிலமைகள் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர், ஆட்சி செய்ய முடியாவிட்டால் மைத்திரி – ரணில் அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தொடரும் வன்முறைகளை அடுத்து பொலிசாரை காவல் கடமையிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுதந்தர எதற்காக உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஆவா என்ற அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், பிரதமர் ஆவா வந்தது – போனது என்ற நாடாளுமன்றில் கூறி நகைப்புக்கு இடமாக்க முயன்றிருக்கின்றார் என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment