நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, ஒழிக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓக்லாந்து நகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,ரணில் விக்கிரமசிங்க,

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்சி முறையைக் கொண்டு வருவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை.

எவ்வாறாயினும், இதன் அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்துக்கு அல்லது  தேசிய சட்டசபை, செனட் சபை மற்றும் மாகாணசபைகளுக்கு மாற்றுவது குறித்து கலந்துரையாடப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments