மைத்திரியிடம் மனிதாபிமானம் இல்லை வேதனைப்படும் மஹிந்த!
மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடு தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் ஆளும் கட்சியின் சிலர் நேற்றைய தினம் வற் சட்டமூலத்திற்கான வாக்களிப்பினை புறக்கணித்துள்ளனர்.
அவ்வாறு புறக்கணித்ததன் ஊடாக அவர்களுக்கு வற் சட்டமூலத்தின் மீது உள்ள எதிர்ப்பினை காண முடிந்துள்ளது.


Comments
Post a Comment