கொழும்பு – புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில்…


pu9
கரீம் ஏ.மிஸ்காத்)

(13/10/2016) அன்று புத்தளம் பொது நூலகம் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், இடம்பெற்ற கருத்து வழங்கும் நிகழ்வின் போது,

சர்வமத அமைப்பு, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக நல ஆர்வலர்கள்,

கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன் போது,
இப்பத்திரிகை மாநாட்டில் புத்தளம் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சமன்த கோரலாராட்சி, புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம்.ஏ.ஜனாப், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா புத்தளம் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், சென் கிளமன்டஸ் தேவாலய பிதா.கே.வரதராஜன், கிரலோகம சுதஸ்ஸி தேரர்,

புத்தளம் வாழ் யாழ்-கிளிநொச்சி உலமா அமைப்பின் தலைவர் அப்துல் மலிக், சூழலியலாளர் எஸ்.எம்.முபாரக், கரைத்தீவு மு.வி. ஓய்வு பெற்ற அதிபர் கே.எம். அஸீஸ்.,

ஆகியோர் இவ் ஊடக மாநாட்டில் தமது கருத்துக்களை தெரிவிகத்தனர்.

சூழலியலாளர் எஸ்.எம்.முபாரக், கருத்து தெரிவிக்கையில்:
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா புத்தளம் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் கூறுகையில்
மனிதன் என்ற வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எதிரானவனாக மனிதனை பாதிக்கும் வகையில் செயல்களில் ஈடுபடக் கூடியவனாக இருக்க முடியாது.
அந்த வகையில் கொழும்பு மக்களும் எமது மக்கள் அவர்களும் குப்பையின் தாக்கத்தால் பாதிக்க கூடாது இருந்த போதிலும் அதனை தீர்ப்பதற்கு இன்னொரு பிரதேசம் பாதிக்கும் வகையில் இதற்கான தீர்வினை எடுக்க முனைவதே மிகவும் தவறான விடயமாகும்.

இது கொழும்பு மக்களுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை.
இது எம் பிரதேசத்தில் ஏற்பட உள்ள பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையாகும்.
இந்த நல்லாட்சியை கொண்டுவருவதற்கு புத்தளம் தொகுதி மக்களும் பெரும் பங்காற்றியுள்ளார்கள்.

சென்ற அரசின் திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியால் புத்தளம் மக்கள் பாதிப்படைவதை தடுக்க நாம் செய்யும் சாத்வீகரீதியிலான ஒரு வழிமுறையும், இவ் அரசிற்கான ஆலோசணையுமாகும்.
ஆகவே கொழும்பு குப்பை மாத்திரம் இல்லை இலங்கையின் எந்த பிரதேசத்தில் இருந்தும் புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டு வந்து தட்டும் சிந்தனைகள் நிறுத்தப்படல் வேண்டும்.
இச்செயல் முறை நிறுத்தப்படும் வரை எமது சாத்வீகப்போராட்டம் தொடரும் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
சூழலியலாளர் எஸ்.எம்.முபாரக், கருத்து தெரிவிக்கையில்:
கொழும்பில் இருந்து கொண்டு வரப்படும் குப்பையானது, சூழலியல் தாக்கம் மதிப்பீட்டின் படி , மூன்று வழிமார்க்க கட்டங்களாக செயற்படுத்தப்பட்டு,

புத்தளத்தை நோக்கி கொண்டு வரப்பட உள்ளது.

1. கொழும்பில் இருந்து நீர்கொழும்பு

2. நீர்கொழும்பில் இருந்து சிலாபம்

3. சிலாபத்தில் இருந்து புத்தளம்.
இறுதியாக புத்தளம் வழியாக அறுவக்காட்டில்  குப்பை தட்டும் இச்செயன்முறை இடம்பெற உள்ளது.
இந்த அடிப்படையில் கொழும்பில் இருந்து மாத்திரம் குப்பை கொண்டுவரப் படமாட்டாது, மாறாக நீர்கொழும்பு, சிலாபம் போன்ற பிரதேசங்ளில் இருந்தும் குப்பைகள் கொண்டு வரப்படும்.

இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் சூழலியலாளர்கள், விஞ்ஞானிகளை கலந்தாலோசித்து செய்யவில்லை, இதனை அரசியல்வாதிகள் அரசியல் முடிவின் பிரகாரம், இந்த முடிவுகளை எடுத்து செய்வதே காரணமாகும்.
இந்த நடவடிக்கையால் முந்தல், புத்தளம் கல்பிட்டி, வண்ணாத்தவில்லு போன்ற நான்கு பிரதேசங்களும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகப்போகின்றது,

காரணம் இங்கு மீன்பிடி தொழில், உப்பு உற்பத்தி, இறால் வளமும் வளர்ப்பும், விவசாயம் போன்றவை சிறப்பாக விளங்குகிறது.

எனினும் இது தொடர்பாக இவர்கள் குப்பை தட்டும் விடயத்தில் எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்ட அவர்

1957ம் ஆண்டு எலுவன்குளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 7 மீற்றர் உயரத்திற்கு வெள்ளநீர் வந்தது. இதனால் அங்குள்ள பாடசாலை உட்பட அப்பிரதேசம் நீரில் மூழ்கின.
ஆனால் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவோர் கூறுகிறார்கள். 3 மீற்றர் உயரத்திற்குத்தான் வெள்ள நீர் வந்துள்ளது, நாங்கள் 4 மீற்றர் உயரத்தில் பாதுகாப்பு சுவரை அமைத்து செயற்படுத்துவோம், இது பாதுகாப்பானது என்கிறார்கள்
கால நிலை மாற்றம் காரணமாக  அண்மையில் கொளன்னாவப் பகுதியில் வெள்ளப்பாதிப்பால் குப்பை கரைந்து ஏற்படுத்திய பாதிப்பை நாம் அறிவோம்.
அதேபோன்று இங்கும் இவ்வாறு குப்பை தட்டப்படடுமாயின் எதிகாலத்தில் காலநிலை மாற்றத்தால் வெள்ளம் ஏற்படும் போது குப்பை கரைந்து அதன் நச்சு திரவத்தின் நீரில் கரைந்து “காலாவி” அற்றினூடாக கடலில் சேர்ந்துவிடும், அத்தோடு கடல் நீரோட்டமானது

வடக்கில் இருந்து தெற்காகவும், தெற்கில் இருந்து வடக்காகவும் காலத்துக்கு காலம் நடைபெறுவதால் இங்கிருந்து கல்பிட்டில் வரை இந்த நச்சு தன்மை பரவும்.

இதனால் மீன்வளம் அழியும், அது மட்டும்மல்லாது உப்பு செய்கைக்கு இந்த கடல் நீரே பயன்படுத்தப்படுகின்றது. நச்சு தன்மையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கும்.
இதே போல நச்சு தன்மையான நீரால் இறால் பண்ணை உற்பத்தி அழிவுறும்.

அத்தோடு வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் ஆழ்கிணறுகளை நம்பி மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயமானது, குப்பைதட்டப்படும் பகுதியில் கசிவுகள் ஏற்படுமாயின் அதன் நச்சு தன்மையால் பாதிக்கும். கிணற்று நீரை குடிப்போரும் அங்கு பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவர்.
எனவே இவை சார்ந்த சுமார் 16000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்புருவர்.
அத்தோடு இங்கு வாழும் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலைமை உருவாகும்.
இந்த குப்பைகளை புகையிரதம் மூலம் அறுவாக்காட்டுக்கு கொண்டு செல்ல 1வெகனுக்கு 1கிலோமீட்டர் கொண்டுவர 925/= செலவாகும் ஒருதடவை (1200 மெட்ரிக் டொன்) 27வெகனுக்கு 170 கிலோமீட்டர் அடிப்படையில் கணக்கிடும்போது ஒரு நாளைக்கு அண்ணளவாக 41இலட்சம் ரூபாய் செலவாகும்.

இந்த செலவை யார் வழங்க வேண்டும்? மக்களிடம் தான் இந்த சுமை ஏற்படும்
இதற்கு மாற்றீடாக மீள் சுழற்சி நடவடிக்கை மூலம் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி 10மணித்திளத்தில் 400 டொன் குப் கொம்போஸ் பசளை உற்பத்தி செய்ய முடியம், மாற்றீடு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான இயந்திரங்கள் இப்போது உள்ளன.
அத்தோடு குப்பை வாசத்திற்கு வனவிலங்குகள் ஊர்முனைக்குள் வரும் அதிலும் குறிப்பாக யானையின் தாக்கம் ஐந்து விவசாய கிராமங்களை பாதிக்கும். மனிதன் யானை முறன்பாடுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும்.
மேலும் உள்ளூராட்சி சட்டத்தின் 129,130,131 சர்த்தின் படி தமது நகர,பிரதேச சபைகளுக்குள் சேறும் குப்பைகளை அந்த அந்த சபைகளே அதனை பொருப்பெடுத்து தீர்க்க வேண்டும். இப்போது அதற்கு மாற்றமாக கொழும்பு குப்பையை எமது பிரதேசம் பொருப்பெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றார்கள்.
மேலும் தொழில் நுட்ப மதிப்பீட்டுச் சபையின்  அனுமதி இன்றி இதை அமுல்ப்படுத்த முடியாது அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 11, 12ம் திகதிகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆணையாளர் இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் தமது கருத்தை தெரிவித்தார்.
கலாநிதி சுனில் கிரப்பிட்டிய ஆணையாளராக இருந்த போது அரசியல் தலையீட்டுக்கு நான் தலைசாய்க்கமாட்டேன் என்று கருத்துத் தெரிவித்த போதும், பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் இப் பதவியை இராஜினாமா செய்ருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோன்று நுரைச்சோலை அனல்மிசார உற்பத்தி நடவடிக்கைகளாளும் நாம் எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பூர் அனல் மின்சாரம் நடவடிக்கை அங்குள்ள மக்கள் சக்தி, அங்குள்ள புத்திஜீவிகள், அரசியல் வாதிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அது கைவிடப்பட்டது.
இதேபோல் நாமும் செயற்பட்டு நல்லதொரு முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்கின்றோம்.
தேவையானபோது சட்டரீதியாகவும் நாம் செல்ல தயாரக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு புத்தளம் வாழ் யாழ் – கிளிநொச்சி உலமா அமைப்பின் தலைவர் மெளலவி அப்துல் மலிக், சென் கிளமன்டஸ் தேவாலய பிதா.கே.வரதராஜன், ஆகியோர்களும் உரையாற்றினார்கள்.
புத்தளம் அருவைக்காட்டு பகுதியில் குப்பை தட்டும் அரசின் நிலைப்பாடானது இம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து சமூகத்தின் மீதும் நீண்டகாலத்துக்கு பாதிப்பினை தொடர்ச்சியாக ஏற்படுத்தும். என்பது குறிப்பிடத்தக்கது.
pu-jpg2

Comments