மூன்று அற்புதமான நபிமொழிகள்
♥♥♥♥♥♥♥♥♥ அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வதைத் தவிர அதிகமாகப் பேசவேண்டாம் ஏனேனில், அதிகப் பேச்சு உள்ளத்தின் கடினத் தன்மையையும், உணர்வற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. மக்களில் அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் தூரமானவன் கடினமான உள்ளம் உடையவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#திர்மிதி
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#புகாரி
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥உலகில் யார் இருமுகம் உடையவனாக இருப்பானோ (நயவஞ்சகனைப் போன்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பலவிதமாகப் பேசுகின்றவன்) கியாமத் நாளன்று அவனது வாயில் தீயாலான இரண்டு நாவுகள் இருக்கும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
#அபூதாவூத்


Comments
Post a Comment