கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களும் புலிகளுடன் எதுவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து வெள்ளைவேனில் வந்தோரால் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படை புலனாய்வு பிரிவின் சிப்பாயான அளுத் கெதர உபுல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்தார். கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதிவான் கிஹன் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சாட்சியமளித்த மேற்படி கடற்படை உத்தியோகத்தர் இவ்வாறு கூறினார்.
குறித்த ஐந்து மாணவர்களும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு தான் உணவு வழங்கியதாகவும் அவர்களுடன் உரையாடியதாகவும், அதன் போது தனது புலனாய்வு அறிவின் ஊடாக அவர்களுக்கு புலிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொன்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment