இரண்டு தமிழனை அழித்து இன்னொரு பிரபாகரனை வரவைக்க முயற்சி!
இலங்கை தமிழர்கள் மாத்திரமின்றி அனைத்துலக தமிழர்களையும் அச்சத்தில் உற்படுத்திய விடயமாக யாழ் பல்கலைகழக மாணவர்களின் படுகொலை அமைந்துவிட்டது.
காயங்களை தன்னுள்ளே புதைத்துக்கொண்டு, சரி இனியாவது நிம்மதியாக வாழலாம் என எண்ணிய தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வித்திடக்கூடிய சூழலுக்கான ஆரம்பித்தினை ஏற்படுத்தும் வகையில் இப்படுகொலை சம்பவம் அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு யுத்தத்திற்கு அடித்தளமிடப்பட்டு கருப்பு வரலாற்றுக்காண ஆரம்ப படலமாகவே இதனை அடையாளப்படுத்த முடியும்..

இந்த இரு மாணவர்களும் கல்வியை தொடர்ந்த காலப்பகுதி வடக்கில் நடைப்பெற்று வந்த யுத்த காலமாகும் வானில் இருந்து வீசப்படும் பயங்கர குண்டுகளுக்கும் படையினரின் கடும் தாக்குதல்கள் வீதி சோதனைகள் என்று கல்வியில் முழுக்கவனத்தையும் மாணவர்களால் செலுத்த முடியாத காலப்பகுதியில் பல்வேறு படையினரின் கட்டுப்பாட்டிற்கும் இடைஞ்சல்களுக்கும் பொருளாதார சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து பல்கலைகழகத்திற்கு தெரிவான இந்த இரண்டு இளைஞர்களையும் அநியாயமாக பலி எடுத்துவிட்டார்களே இந்த காவற்துறையினர்.
இவர்களின் மரணம் சம்பவம் நடைபெறுவதற்கு முன் யாழ் பொலிஸ்சார்கள் ஓர் அதிரடி நடவடிக்கைக்கான திட்டத்தை அமுல் படுத்தப்போவதாக அறிவித்து யாழ் நகரமெங்கும் விசேட சோதனைகளுக்கு தயாராகிய குழுவாக பவனிவந்தபோது மக்கள் நினைத்தார்கள் யாழ் பிரதேசத்தில் வாள் வெட்டும் குழுவினரையும் ஏனைய சமூகவிரோதிகளையுமே பொலிசார் கைது செய்ய போகின்றார்கள் என நிம்மதி மூச்சுவிட்டு முடியும் முன் இரண்டு அப்பாவி இளைஞர்களை படுகொலை செய்துவிட்டார்கள்.
இதை தமிழ் சமூகம் சிறிதும் எதிர்பாக்கவில்லை. இறந்த மாணவர்கள் தங்களின் எதிர் காலத்திட்டத்தை எவ்வாறு இருக்க வேண்டுமென கனவு கண்டார்களோ அது இறைவனுக்குத்தான் தெரியும்.
ஆனால் அவர்களின் பெற்றோர் சகோதர சகோதரிகள் எண்ணமோ இவர்களின் கல்வியின் முடிவில் தங்கள் குடும்பமே சிறப்பான வாழ்க்கைக்காண பாதையில் இட்டு செல்லும் என்ற நிலையை நாள்தோரும் எண்ணிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்பது உறுதியாகும்.
இவர்களை துப்பாக்கி குண்டுகள் மூலம் படு கொலை செய்யப்பட்டவிடயத்தை சம்பந்தப்பட்ட பொலிசார் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய தலைமைகளுக்கு அறிவிக்காது ஏதோ வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தமுடியாது பலியானதாகவே முதலில் வெளிவந்த ஊடக செய்திகளை காணக்கூடியதாக இருந்தது.
நாட்டின் குற்ற செயல்களை தடுக்கவும் உண்மையை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் முழுமையாக மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய பொலிஸ் தினைக்களத்தில் ஒரு சில இனவாதிகள் இருந்துக்கொண்டு, இனவாத செயல்களின் மூலம் தங்களின் வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்வதும், தமிழர்கள் என்றால் அவர்களை பழிவாங்குவதும் இலங்கை பொலிஸ் தினைக்களத்தில் நடைப்பெற்றுவருவது வழமையானதே.
யுத்த கால பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தொகைகை கணக்கிடமுடியாது. அக்கால பகுதியில் பல்லாயிரகணக்கான இளைஞர்கள் யுவதிகளின் உயிர்களை பழியாக்கப்பட்டதோடு இருந்த அனைத்து பூர்வீக வளங்கள், கலை, கலாச்சார, அரசியல் பொருளாதார சம உரிமைகளுக்காக போராடிய இளைஞர்களுடன் மாண்டு மடிந்த இளம் தாய்மார்கள் பெரியோர்கள் வைத்தியர்கள் குழந்தைகள் என்ற வரிசையில் இந்த இரு இளைஞர்களும் இணைக்கப்பட்டுவிட்டனர்.

இவைகளை ஏன் சிங்களம் தொடர்கின்றது ? அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களுடன் இனி எத்தனை உயிர்களை பழி எடுக்கப்போகின்றார்கள் ? இவர்களின் மரணத்தை சர்வ சாதாரணமாக மக்கள் பார்க்கவில்லை. இவர்கள் மூலம் இனவாத அதிகாரிகள் தமிழர்களுக்கு கூறும் எதிர்வு குரலாக நாம் நினைப்பது முழு தமிழர்களின் எதிர்கால சந்ததியினரும் இனவாதிகளின் கட்டுப்பாட்டில் நிரந்தர அடிமையாகவே இருக்கவேண்டும் என்பதா ?
இந்த படுகொலை சம்பவத்தில் சந்தேக நபர்களாக இருக்கும் ஐவருமே சிங்களவர்களாக இருக்கின்றார்கள். இது மக்களுக்கு பெரும் சந்தேகத்தை தோற்றிவித்துள்ளது. காரணம் யாழ் பகுதியில் பெரும்பாலான மக்கள் தமிழர்களே இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க சட்டத்தை பாதுகாக்க நிலைமையை அல்லது தவிர்க்க முடியாத இரவு நேரத்தில் பயணிக்கும் சூழ்நிலையில் யாராவது செல்லும்போது அவர்களை விசாரணை செய்ய அந்த குழுவில் ஏன் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை நியமிக்கவில்லை என்ற கேள்வியும் மக்களுக்கு தோன்றத்தான் செய்கின்றது.
பொதுவாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளாக முஸ்லிம் உத்தியோகஸ்தர்களை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு நிறைவேற்று அதிகாரங்களும் இவர்களிடமே இருக்கின்றது அந்த நிலை வட மாகாணத்தி இல்லாதிருப்பது வேதனைக்குறிய ஒன்றாகும்.
இதற்கு யார் பொருப்பு தமிழ் அரசியல்வாதிகளா அல்லது அரசா ? பொதுவாக தமிழ் அரசியல்வாதிகளின் சுய பாதுகாப்பிற்கு கூட பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்களையே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள்வரை வைத்திருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு வாக்களிக்க மாத்திரம் தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள்.
இறந்த இந்த மாணவர்களின் மரணம் சம்பவித்த தினத்தன்று திருக்கோணமலையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைப்பெற்ற சுற்று சூழல் நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் கலந்துக்கொண்டிருந்தார் இவருக்கு இந்த மரணம் சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
அவர் சகலவற்றையும் அறிந்திருந்தும் ஒன்றும் அறியாதவர் போல் ஜனாதிபதியின் மனம் எந்த வகையிலும் நோகாதபடி அரசையும், தலைவரையும் புகழ்பாடியது மட்டுமல்லாது அரசின் சகல நடவடிக்கைகளுக்கும் மக்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அப்படியானால் இந்த படுகொலையையும் சேர்த்தா…..?
நல்லாட்சி அரசின் பாதுகாப்பு செயலாளரினால் கூறப்பட்ட கருத்தும் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருந்தது. இதை நாம் கூறுவதற்கும் முன்பே யாழ் பல்கலைக்கழக கல்வியாளர்களும் சிங்கள மாணவர் சமூகமும் கூறுகின்றது.
இந்த மாணவர்களின் மரணம் தமிழ் மாணவ சமூதாயத்திற்கே விடுக்கப்பட்ட சிகப்பு அறிக்கையாகவே இருக்கின்றது. இனி இவர்களால் கல்வியில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாது. அதே போல் கல்விசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களாலும், நிம்மதியாக இருக்க முடியாது இந்த நிலையிலே் எதிர் கட்சி தலைவர் ஜனாதிபதி மற்றும் பொது அமைப்புக்களின் கோரிக்கையாக பக்க சார்பற்ற விசாரணை தேவை என்பதாகும்.
இதில் இருந்து மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டியது பக்க சார்பாகவும் விசாரணை அறிக்கைகள் வரலாம் என்பதே. இறந்த இந்த இரு செல்வங்களும் மீண்டும் வரப்போவதில்லை. இருந்தும் இந்த கட்டுரை எழுதும்வரை பிரதமரோ அல்லது பொலிஸ் தினைக்களத்திற்கு பொருப்பான அமைச்சரோ எதுவிதமான அறிக்கைகளையும் ஊடகங்களுக்கு தெரிவிக்காதிருப்பது ஏன் ?
நாடு இந்த சம்பவத்தை மறக்கலாம் ஆனால் இறந்தவர்களின் பெற்றோர்களால் மறக்க முடியாது அதே போல் யாழ் பல்கலைக்கழக மாணவ சமூதாயத்தாலும் மறக்க முடியாது.
இனி தன் பிள்ளையை யாழ் பல்கலைகழகத்திற்க அனுப்புகின்ற பெற்றோர் ஒவ்வொருவரும் இச்சம்பவத்தினை எண்ணி துயரம் வடிக்கும் கருப்பு வரலாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனி எஞ்சியிருக்கும் தமிழினத்தினை காக்க எத்தனை பிரபாகரன்கள் முளைக்கப்போகின்றார்களோ ? பொருத்திருந்து பார்க்கலாம்.

Comments
Post a Comment