காட்டு யானைத் தாக்குதலில் தாய் பலி: இரு பிள்ளைகள் படுகாயம்!

தந்தரிமலை, குடாகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்கு அருகில் உள்ள மரக்கறி தோட்டத்திற்கு யானை வந்துள்ள நிலையில், வீட்டில் இருந்த நாய் அதனை துரத்தியுள்ளது. இதன்போது வீட்டு திசை நோக்கி ஓடி வந்த யானை அங்கிருந்த பெண்ணையும் அவரது இரு பிள்ளைகளையும் தாக்கியுள்ளது.

இதில் 27 வயதான குறித்த இரு பிள்ளைகளின் தயார் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 7 வயது ஆண் பிள்ளையும், 3 வயது பெண் பிள்ளையும் தந்திரிமலை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments