துரிதமாக வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி!

சர்வதேச ரீதியல் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில்

2015ஆம் ஆண்டு இறுதியில் இருந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாய் அமெரிக்கா டொலரிற்கு எதிராக 1.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விகித அடிப்படையில், இலங்கை ரூபாய் யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 3.0 வீதத்திலும், ஜப்பானின் யென்னுக்கு எதிராக நூற்றுக்கும் 1.5 வீதத்திலும், கனேடிய டொலருக்கு எதிராக நூற்குக்கு 5.8 வீதத்திலும், இந்திய ரூபாய்க்கு எதிராக நூற்றுக்கு 1.4 வீதத்திலும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதியினுள் ஸ்ரேலிங் பவுண்ட்களுக்கு எதிராக நூற்றுக்கு 18.8 வீதத்திலும் இலங்கை ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments