புல்மோட்டையில் ஸ்டார் கிண்ணப் போட்டி

கிண்ணம் கிரிக்கெட்2016 ம் ஆண்டுக்கான சுற்றுப்போட்டி சகோதரர் ரிஸ்வான் மற்றும் ரஸீன் அவர்களின் ஏற்பாட்டில் புல்மோட்டை பெப்சி உரிமையாளர் அனீஸ் மௌலவி
மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் .அன்வர் ஆகியோரின் அனுசரணையில் குறித்த சுற்றுப்போட்டி புல்மோடடை அரபாத் நகர் முஸ்லீம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .

குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம்.அன்வர் பிரதம அதிதியாக பேஸ்பிசி முகவர் அனீஸ் மௌலவி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர் .

குறித்த நிகழ்வின்போது அரபாத் நகர் முஸ்லீம் வித்தியாலயத்தில் 5ம் தர புலமைப்பரீட்சையில் 153 புள்ளிகளை பெற்று சித்தி எய்திய மாணவி ஒரே ஒரு மாணவி பாத்திமா சஹீக்கா அவர்களுக்கான பணப்பரிசில்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.

Comments