.130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது!

களனி பேலியகொட பகுதியில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments