கணவரின் மின்சாரவேலி மனைவியை கொன்றது... மற்றொரு பெண் புத்தளம் வைத்தியசாலையில்..

காட்டு விலங்குகளிடம் இருந்து பயிரைப் பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் இருந்து மின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருவலகஸ்வெவ பகுதியில் நேற்று 16ம் திகதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தனது பயிரைப் பாதுகாக்க இரவு வேளைகளில் குறித்த மின்சார வேலியை இயங்கச் செய்யும் அப் பெண்ணின் கணவர் காலையில் அதனை அப்புறப்படுத்தி விடுவதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவ தினத்தன்று அவர் குறித்த மின்சார வேலியை அகற்றாதிருந்துள்ள நிலையில், 40 வயதான அவரது மனைவி அப் பகுதிக்கு சென்ற வேளையே மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

இதன்போது மின் தாக்குதலுக்கு இலக்கான இவரை காப்பாற்ற முயற்சித்த மற்றுமொரு பெண்ணும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருவலகஸ்வெவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments