உடனடி தகவல் வழங்குமாறு ஜனாதிபதியின் கோரிக்கை!!

நாட்டுக்கு பாதகமான செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால், அது எங்கு இடம்பெறுகிறது என்ற தகவலை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஹசலக பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். 

நாட்டுக்கு பாதகமான எந்த செயற்பாடுகளையும் அரசாங்கம் அனுமதிக்காது. 

ஆனால் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத சில நபர்கள், போலியான பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments