விபத்தில் இருவர் படுகாயம்!

திருகோணமலை – தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று(18) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பொலன்னறுவையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக தோப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வண்டி பாதையில் சென்று கொண்டிருக்கையில் அதன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், படுகாயமடைந்த நபர்கள் தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments