வட மாகாண சபையின் பிரதி அவை தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன்!
இன்று வடமாகாண சபையில் இதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு, 18 பெரும்பான்மை வாக்குகளால் இவர் தெரிவு செய்யப்பட்டதுடன் சபைத்தலைவர் சிவஞாம் முன் சத்தியபிரமாணமும் செய்துக்கொண்டார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று இடம்பெற்ற போது, பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது,பிரதி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டடது.
இதனை தொடர்ந்து சபையின் பிரதி அவைத் தலைவராக வட மாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரனை நியமிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
எனினும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை பிரதி அவைத் தலைவராகத் தெரிவுசெய்யுமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிலையில் வாக்கெடுப்பின் மூலம் பிரதி தலைவரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடைப்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் நடுநிலையாக 1 வாக்குகள் பதிவாகியதை அடுத்து வல்லிபுரம் கமலேஸ்வரன் வடமாகாண பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Comments
Post a Comment