நல்லாட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!

நல்லாட்சியாளர்கள் எனக் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளித்து வருவதாகவும், இதனையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் செய்திருந்தார் என சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று மருதானை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

இன்று ஜனாதிபதி மைத்திரிபால செய்ததையே, கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் முன்னெடுத்திருந்தார். அவ்வாறாயின் இருவருக்கும் வேறுபாடில்லை என்பதே புலப்படுகிறது.

மஹிந்த ஆட்சியில் சுயாதீன அமைப்புகளில் முழுமையான அரசியல் தலையீட்டை ஏற்படுத்தி நாட்டின் சுயாதீனத்தை முழுமையாக சீரழித்தார். அவரது விசுவாசிகளுக்கு மாத்திரமே அவரது ஆட்சி சாதமாக அமைந்தது.

அதேவேளை, இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருந்தார்.

அதே பாணியில் தான் தற்போதைய ஜனாதியும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்ற அவர்களது வாக்குறுதியை நம்பி வாக்களித்த நாம் ஏமாற்றப்படுவதான உணர்வு தற்போது எழுந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Comments