கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படட வறுமை ஒழிப்பு தின நிகழ்வுகள்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படட வறுமை ஒழிப்பு தின நிகழ்வுகள் நேற்று(17)கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இடம்பெற்ற இவ் வைபவத்தில், திவிநெகும உதவிபெறும் குடும்பம்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச தரத்திலான கனரக இயந்திர இயக்குனர் பயிறசியை பூர்த்தி செய்த 25இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், வீடற்ற 2வறிய குடும்பம்களுக்கு அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்தல், 10குடும்பம்களுக்கு தொழில் முயறசிக்கான கடன் வழங்குதல், உணவு உற்பத்திக்கான பழக்கன்றுகள் வழங்குதல் , திவிநெகும உதவிகளை பெற்று முன்னேற்றம் அடைந்த குடும்பங்கள் தமது உதவிபெரும் ஆவணம்களை அரசாங்கத்துக்கு மீளளித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, திட்ட முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா, திவிநெகும வங்கி-வலய முகமையாளர் எம்.எம்.எம்.முபீன், உட்பட திவிநெகும அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments