சம்மாந்துறை வலய ஆசிரியர் பயிற்சி நிலையம்
சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள சுமார் 1000 ஆசிரியர்களுக்கு சர்வதேச ரீதியில் நவீன முறையில் பயிற்சிகளை வழங்குவதற்காக வேண்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியினால் 33 மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை வலய ஆசிரியர் பயிற்சி நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் சம்மாந்துறை வங்காவடியில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அங்கு உரையாற்றுகையில்- ஆசிரியர் பயிற்சி நிலையக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு கல்வி அமைச்சு 3 கோடியே 30இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நவீன தரத்தில; சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரு வளாகமாக அமையப் பெறவுள்ளதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கு உதவ இது உந்து சக்தியான இடமாக இப்பயிற்சி நிலையம் திகழும் இதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். என்றார்.


Comments
Post a Comment