அவசரமாக நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி!
இங்கிலாந்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று நாடு திரும்பவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே அவர் விரைவாக நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் சந்திரிக்கா எதிர்ப்பார்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தெரியவருகிறது.


Comments
Post a Comment