திருகோணமலை முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணம்

 திருகோணமலை முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கான கடின பந்துக்கான மேடேர்ன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் வழங்கி வைப்பு .

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 65000 பெறுமதியான கிரிக்கெட் கடின பந்துக்கான (மேடேர்ன்)விரிப்பு முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்தினருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வின் போது தம்பலகாமம் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் ஆசிரியர் எப்.நதீர்க்கான், இணைப்பாளர் ஆசிரியர் ஏ.ஐயூப்கன்,பொருளாளர் எம்.ஏ.ஜிஹாபிதீன் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும். கலந்துகொண்டனர்.

Comments