செவ்வாயன்று கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

வருடத்தில் 300 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற பிரதான உடன்படிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது எனும் சங்கங்களின் கோரிக்கையை, பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் நேற்றும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், நேற்று கைச்சாத்திடப்படவிருந்த கூட்டு ஒப்பந்தத்தில் இழுபறி ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் பிரதமரிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, முதலாளிமார் சம்மேளனத்தை இணங்கச் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments