பாடசாலை வளவுக்குள் புகுந்த முதலை!

வவுனியா, உக்குளாங்குளத்தில் பாரிய முதலையொன்றை இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரட்சி காரணமாக குளத்தில் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளதால், ஈரூடகவாழிகள் மக்கள் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உக்குளாங்குளம் கனரா பாடசாலைக்கு அருகே பாரிய முதலையொன்று வந்துள்ளது.

முதலையை கண்டு நாய்கள் குரைத்தமையினால் அயல் வீட்டாரின் உதவியுடனும் உக்குளாங்குளம் இளைஞர்களின் உதவியுடனும் முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளார்கள்.

இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் பிரிவனரால் அது மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Comments