யாழில் விசேட ரோந்து நடவடிக்கை! மூவர் கைது!

யாழ்.காரைநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை வீதியில் ரோந்து நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது,  36 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்தரை விஷேட அதிரடிப் படையினர் கைதுசெய்ததோடு, மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஷ

சந்தேகநபர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர்கள் இருவரும் காரைநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Comments