கல்வி அமைச்சு மீது சந்தேகம்!

கிழக்கு மாகாண கல்வி துறையை வீணடிக்கும் செயற்பாடை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மாகாணத்தில் 5 ஆயிரத்து 21 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதுதொடர்பாக விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மாகாணத்தின் சாதாரண கோரிக்கைகளை பின்தள்ளி, மாகாண ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன்,

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் கவனயீனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், 9 மாகாணங்களுக்கும் உரிய முறையிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரிய நியமனங்களில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதுகுறித்து மேன்முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Comments